உளுந்தூர்பேட்டையில் களம் இறங்குகிறார் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த்

vvநடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.முதல் ஐந்து கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கிய பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் தனியாக களம் கண்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்