இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன் ஹீரோவாக அறிமுகம்

இசைஞானி இளையராஜாவின் மூத்த அண்ணனும், தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன், ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் காதலை மையமாகக் கொண்ட இசைத் திரைப்படமாக உருவாகிறது.

குடும்ப நட்பின் காரணமாக தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் தயாரிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். வெங்கட் பிரபு கதையையும், யுவன் சங்கர் ராஜா இசையையும் வழங்க, சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார். சுஜித் என். சுப்ரமணியம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜெயனுடன் சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை, நட்பு மற்றும் வலுவான கூட்டணியுடன் உருவாகும் இந்தப் படம், ஜெயனின் திரைப்பயணத்திற்கு சிறப்பான தொடக்கமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.