இன்றுடன் ஓய்வு பெறும் INS விராட்

உலகின் மிகப்பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விராட்டை, ஆடம்பர ஓட்டலாக மாற்றும் திட்டத்தை இந்திய பாதுகாப்புத் தறை பரிசீலித்து வருகிறது. விமான தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ் விராட், கடந்த 1987-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன் இக்கப்பல் 27 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படையில் சேவை புரிந்தது. இக்கப்பல் 1943 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் ஐ.என்.எஸ் விராட் கப்பல் இன்று தனி பணியை நிறைவு செய்ய உள்ளது. இந்த கப்பலின் சேவையை நினைவு கூறும் வகையில் பேசிய இந்திய கடற்படை அதிகாரி  கிரிஷ் லூத்ரா, இந்த விராட் கப்பல் அப்போது 65 மில்லியன் டாலர் என்ற குறைந்த விலைக்கே வாங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

விராட் கப்பலை வாங்கிய போது 5 முதல் 10 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று நினைத்ததாக கூறினார். ஆனால் அனைத்து எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக சுமார் 30 ஆண்டுகள் இக்கப்பலை பயன்படுத்திவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். பணிநிறைவு பெறுவதையடுத்து விக்ராந்த் கப்பலை போன்று விராட் கப்பலின் பாகங்களும் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் திடீர் திருப்பமாக விராட் கப்பலை ஆடம்பர ஓட்டலாக மாற்ற வேண்டும் என ஆந்திரா கோரியுள்ளது. அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  மத்திய அரசுடன் இணைந்து விசாகப்பட்டினம் கடற்பகுதியில் விராட் ஆடம்பர ஓட்டல் திட்டத்தை நிறைவேற்ற தயார் என்பது அவரது வேண்டுகோள். இவரின் கோரிக்கையை பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைகள் பரிசீலித்து வருகின்றன. இத்திட்டம் மத்திய அரசால் ஏற்கப்பட்டு கம்பீரமாக திகழ்ந்த போர்க்கப்பலானது, சொகுசு ஓட்டலாக மாற்றப்படுமா அல்லது விக்ராந்த் கப்பலை போன்று பாகங்கள் பிரிக்கப்பட்டு இரும்ப கடைக்கு கொண்டு செல்லப்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். இன்று மாலை நடக்கும் ஐ.என்.எஸ் விராட் வழியனுப்பு விழாவில்