இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்: கருணாநிதியை எதிர்த்து மாசிலாமணி

1

 

திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் இணைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை, அக்கட்சியின் தமிழ் மாநில செயலர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டார்.
இதில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாசிலாமணி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.அவிநாசி (தனி) – எம்.ஆறுமுகம், சிவகங்கை – குணசேகரன்.எஸ், பென்னாகரம் – நஞ்சப்பன், தளி – ராமச்சந்திரன், பவானிசாகர் – சுந்தரம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – லிங்கம், வால்பாறை – மணிபாரதி, திருத்துறைப்பூண்டி – உலகநாதன், குடியாத்தம் – லிங்கமுத்து, சைதாப்பேட்டை – ஏழுமலை.மாதவரம் – ஏ.எஸ்.கண்ணன், கீழ் பென்னாத்தூர் – ஜோதி, வீரபாண்டி – ஏ.மோகன், அருப்புக்கோட்டை – செந்தில்குமார், மதுரை கிழக்கு – காளிதாசன், திருப்பரங்குன்றம் – கந்தசாமி, ஒட்டன்சத்திரம் – சந்தானம், பேராவூரணி – தமயந்தி திருஞானம், ஸ்ரீரங்கம் – புஷ்பம் வைத்தியநாதன், அறந்தாங்கி – லோகநாதன், வாசுதேவநல்லூர் (தனி) – சமுத்திரகனி, நாகப்பட்டினம் – தமிமுன் அன்சாரி, திருப்பத்தூர் – சாத்தையா, திருப்பூர் வடக்கு – ரவி.