தமிழக அரசின் சார்பில் படித்த பெண்களுக்கு மூவலூர் இராமமீர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் மூலம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கப்பட்டுவருகிறது. கோவில்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை பயனாளிக்கு இதுவரை வழங்கப்படவில்லை, இதனால் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்கள் ஏமாற்றத்துடன் காத்துள்ளனர்.
எனவே உடனடியாக தாலிக்கும் தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்க வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.இதில் பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரெங்கராஜீலு, துணைதலைவர் பரமேஸ்வரன் மற்றும் பாதிக்கப்பட்டுவர்கள் கலந்து கொண்டனர்.