ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கும் இவருக்கும் இடையே மலையளவு வாக்கு வித்தியாசமானது இருந்தது. திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.டிடிவி தினகரனின் எதிரியாக கருதப்பட்ட அதிமுகவின் தோல்வியை விட திமுகவின் தோல்வியையே பலரும் விமர்சித்து வந்தனர். செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த அளவிற்கு விமர்சனத்திற்கு திமுக ஆளாகி உள்ளது. இந்தநிலையில் ஸ்டாலின் தலைமை பொறுப்பில் இருக்கும் வரை திமுக இடைத்தேர்தல் அல்ல எந்த தேர்தலிலும் ஜெயிக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி விமர்சித்துள்ளார். சற்று முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “கருணாநிதி செயல்பாட்டில் இருந்த வரை திமுக இடைத்தேர்தல்களில் ஜெயித்து வந்தது. வெற்றி பெறாத சூழ்நிலைகளில் கூட போட்டியாக இருந்தது.
ஆனால் தற்போது டெபாசிட்டை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மதிமுக உட்பட பிற கட்சியினரை ஸ்டாலின் அருகில் வைத்துக் கொண்டுள்ளார். பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் உயர் பொறுப்புகளை வழங்கினால் தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்? ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார். அவர் இருக்கும் வரை எதுவும் சரியாக இருக்காது. ஸ்டாலின் சப்பை கட்டு கட்டுகிறார். யார் ஜெயித்தாலும் இப்போது எல்லாம் பணநாயகம் வென்று விட்டதாக கூறுகின்றனர்