கோவில்பட்டி அருகே பஸ் நிறுத்ததில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி பஸ் நிறுத்ததில் இன்று காலையில் அப்பகுதி மக்கள் பஸ் ஏற வந்த போது பச்சிளம் குழந்தையின் அழுகுரலை கேட்டு சென்று பார்த்த போது பிறந்து 15நாளே ஆன பச்சிளம் பெண்குழந்தை வெள்ளை துணியில் சுற்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தைய மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை மருத்துவர்கள் சோதித்து பார்க்கையில் குழந்தை நன்றாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தை பச்சிளம் குழந்தை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.. குழந்தையின் பெற்றோர் யார் ? ஏன் இங்கு வீசி சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.