விஜயின் 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் தற்போது தனது 61-வது படமாக அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது. 

தலைப்பு வைக்கப்படாமலேயே படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி, பெரிய வெற்றியை பெற்றது. எனவே, அந்த தேதியில் வெளியிட்டால் செண்டிமெண்டாக படத்திற்கு நல்லதொரு வரவேற்பு இருக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.