சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு சில விஷயங்கள்

வருடந்தோறும் சபரிமலை சீசனில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் வருகிறது. அதற்கேற்றவாறு கேரளாவில் அதிக அளவில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் மாசு நிறைந்த பகுதியாகவும் சபரிமலை மாறிவருகிறது.. எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவற்றின் பயன்பாடு குறைந்தபாடு இல்லை.

ஆக, சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த விஷயத்தில் தாங்களே சுய கட்டுப்பாட்டுடன் சில விஷயங்களை கடைபிடித்து சபாரிமலையின் தூயமையை காக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் சபரிமலை வரும் ஐயப்ப சாமிகளின் கவனத்திற்கு என சில விஷயங்கள்.

புண்ணிய நதியாகிய ‘பம்பை’ நதியையும் சன்னிதானத்தின் சுற்றுப்புற சூழலையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.

நெகிழ்வு (பிளாஸ்டிக்) பொருட்களை முற்றிலும் (100%) தவிர்க்கவேண்டும்.

பக்தர்கள் தாங்கள் அணிந்துவரும் ஆடைகளை களைந்து பம்பையிலோ அல்லது சன்னிதானத்தின் சுற்றுப்புறங்களிலோ எங்கும் போடக்கூடாது.

மலிவான, கலப்படம் நிறைந்த விபூதி, குங்குமம், நெய் முதலான பொருட்களை பயன்படுத்த கூடாது.

தேங்காய் பிரியரான ஐயப்பனுக்கு படைக்கின்ற தேங்காய்கள், நோய் தாக்கிய சிறிய தேங்காய்களாக அல்லாமல், நல்ல தேங்காய்களை படைக்கவும்.

இவற்றுடன் முக்கியமாக, தரிசனம் முடித்த ஐயப்ப பக்தர்கள், பின்வரும் பக்தர்களுக்கு வழிவிட்டு ஐயப்பன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதுமனா மனு நம்பூதிரி, மாளிகைப்புறம் முன்னாள் மேல்சாந்தி.