இந்தியாவில் 10 கோடியைத் தாண்டிய கைபேசித் தயாரிப்பு

latest-mobiles

ஏற்கனவே பல முன்னணி இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் கொண்டுள்ள நிலையில், பேனசோனிக், மிஸ்டுபிஸி, நைடெக், சாம்சங், போஸ்க், ஜேபில், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ், காண்டினென்டல் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தொழிற்சாலைகளை நிறுவி மொபைல் போன்களை தயாரித்து வருகின்றன. 2014-ம் ஆண்டு துவக்கத்தில் 6.8 கோடி மொபைல் போன்களை தயாரித்து இருந்த இந்தியா தற்போது 10 கோடியை தாண்டியுள்ளது. சென்ற மாதத்தில் மட்டும் எலக்ட்ரானிக் தயாரிப்பு துறையில் 1.14 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ள இந்தியா 15 புதிய மொபைல் தொழிற்சாலைகளையும் ஈர்த்துள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.