இன்ஃபோடெயின்மெண்ட்-க்கு மெட்ராஸ் மீட்டர் ஷோ கொண்டு ஒரு தனித்துவ அணுகுமுறை தரும் ZEE5

ZEE5 ன் ழுவுவு தளத்தில் முதல் புனைவு இல்லாத ஷோ ~~ தகவல் மற்றும் சிரிப்பு ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில் ZEE5ல் காணலாம் ~

தேசியம், 31 ஜூலை 2019: இந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொழுதுபோக்கு, கேளிக்கை ழுவுவு தளம் முதல் நையாண்டி நகைச்சுவை ஷோவான மெட்ராஸ் மீட்டர் ஷோவை வழங்குகிறது. இந்த ஷோ ஒரு சிரிப்பூட்டுகின்ற நகைச்சுவை தோற்றம் கொண்ட வகையில் செய்தி, அரசியல் மற்றும் சமகாலத்திய நிகழ்வுகளை ஒரு வாராந்திர அடிப்படையில் வழங்குகிறது. மெட்ராஸ் மீட்டரால் தேர்வு செய்யப்படும் இந்த ஷோ, ஸ்டாண்ட்அப் கலைஞர்கள் ஒரு மனமகிழ் திருப்பத்துடன் நடப்பு விவகாரங்களை வழங்குவார்கள். புனைவுசாராத இந்த ஷோ இரண்டு பிரபலங்கள் கொண்ட விருந்தினர்களால் அலங்கரிக்கப்படும்.

முதல் தொடர் நிகழ்ச்சியை இங்கே பார்க்கவும்

ஷோ வழங்குபவர் திவ்யா பேசுகையில், ‘இன்ஃபோடெயின்மெண்ட் என்ற சொல்லின் பெயருக்கு ஏற்ற உண்மையான வகையில் ஒரு ஷோவை ZEE5 வழங்குவது என்பது மிகவும் மெச்சத்தக்கது. இந்தியாவில் இது முதல் வகையான ஷோவாக இருக்கும். இதில் செய்தி இலகுவான முறையில் வழங்கப்படும். இந்த ஷோ ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும், இது இளைஞர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

ஷோ வழங்குபவர் துர்கேஷ் தனது அனுபவம் பற்றி பேசுகையில், ‘இன்றைய தினத்தில் வயதானவர்களுக்கு குறுகிய காலஅளவே கவனம் செலுத்த முடிகிறது. எனினும், நீங்கள் எதையும் நகைச்சுவையான முறையில் வழங்குவீரானால், தகவல் சிறப்பாக ஒத்திசைந்துபோகும். இந்த யோசனையை மனதில் கொண்டு, நாங்கள் மெட்ராஸ் மீட்டர் ஷோவை தேர்ந்தெடுத்திருக்கிறோம். இது தகவல், கருத்துகள், நகைச்சுவை மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றின் ஒன்றுகலந்த ஒரு அருமையான கலவையாகும். உலகளாவிய சென்றடைவு மற்றும் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய தன்மைக்கு பெயர்பெற்ற ZEE5 ல் நிகழ்ச்சியை வழங்குவதற்கு நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்,” என்றார்.

ZEE5 இந்தியா நிறுவனத்தின் புரோகிராமிங் ஹெட், அபர்ணா அச்சேர்கர் பேசுகையில், ‘பல்வேறு வகையினங்களில் மாறுபட்ட உள்ளடக்க நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக ZEE5வில் நாங்கள் தொடர்ந்து நிலையாக செயலாற்றி வருகிறோம். எனினும், தி மெட்ராஸ் மீட்டர் ஷோ என்பது, ஒரு தனித்துவமான கருத்தாக்கமாகும். எமது செயல்தளத்தில் இதை நாங்கள் வழங்குவதில் அளவற்ற உற்சாகமும், துடிப்பும் கொண்டிருக்கிறோம். இந்நிகழ்ச்சியை வழங்குவதற்கு மிகச்சிறந்த தொகுப்பாளர்கள் சிலரை நாங்கள் இதில் இணைத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பெரிதும் மகிழ்ந்து இரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.

ZEE5 இந்தியா, பிசினஸ் தலைவர், மனிஷ் அகர்வால் பேசுகையில், ‘நாங்கள் ZEE5யில் பல்வேறுபட்ட விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறோம், எனவே பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், ஒரிஜினல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தாங்கள் விரும்பும் மொழியில் பார்க்கலாம். கன்டன்ட் உருவாக்குபவர்களை ஆதரித்து, பரிசோதிப்பதற்காக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அந்த எண்ணத்தில் உருவானது தான் மெட்ராஸ் மீட்டர் ஷோ. இது நன்றாக வந்துள்ளது, எனவே இது மக்கள்மத்தியில் பெரும் வரவேற்பு பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார்.

12 மொழிகளில், 3500-க்கும் அதிகமான திரைப்படங்கள், 500+ டிவி நிகழ்ச்சிகள், 4000+ மியூசிக் வீடியோக்கள், 35+ நாடகங்கள் மற்றும் 80+ நேரலை டிவி சேனல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ZEE5 இந்நாடு மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள அதன் ரசிகர்களுக்காக நிகரற்ற உள்ளடக்க தொகுப்பின் கலவையை உண்மையிலேயே வழங்கி வருகிறதுநாடு முழுவதும் பரவலாக பாராட்டப்பெற்ற, ஒரு பிராண்டாக ஜிந்தகியின் உலகளாவிய உள்ளடக்கத்தை ZEE5 அதன் விசுவாசமான ரசிகர்களுக்காக மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.