யூகி விமர்சனம் 2.5/5

பிரபல நடிகர் ஜான் விஜய் அடையாள தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான பிரதாப் போத்தன் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனிடம் ஒரு பெண்ணின் (கார்த்திகா) தகவலை கொடுத்து அந்த பெண்ணை கண்டுபிடித்து தர சொல்வதோடு, போலீஸ் எஸ்.ஐ கதிரையும் உடன் வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார்.

மற்றொருபுறம் நட்டியும்

கார்த்திகாவை தன் நண்பர்களுடன் தேடுகிறார். இவர்கள் அனைவருமே கார்த்திகாவுடன் சம்பந்தபட்டவர்களை நெருங்கும் போது அவர்கள் முன்கூட்டியே கொல்லப்படுகிறார்கள். கார்த்திகா யார்? கார்த்திகாவை தேடுவதற்கான காரணம் என்ன? கார்த்திகாவிற்கு என்னவானது? கார்த்திகாவை கண்டுபிடித்தார்களா? ஜான் விஜய்யை கொன்றவர் யார்? போன்ற பல கேள்விகளுக்கான விடை தான் யூகி படத்தோட மீதி கதை.

நடிகை-நடிகர்கள்:

கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்ஷ்மி, ஆத்மியா, முனிஷ்காந்த், நமோ நாராயண், வினோதினி மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : ராஜாதாஸ் குரியாஸ்
இயக்கம் : ஜாக் ஹாரிஸ்
இசை : ரஞ்சன் ராஜ்
எடிட்டர் : ஜோமின்
ஒளிப்பதிவு : புஷ்பராஜ் சந்தோஷ்
கலை இயக்குனர் : கோபி ஆனந்த்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா D’one