YouTube புகழ் டெம்பிள் மங்கியின் இணைய தொடரான “குத்துக்குப் பத்து” படப்பிடிப்பு  முழுமையாக நிறைவடைந்தது

டெம்பிள் மங்கி புகழ் விஜய் வரதராஜ்,  “பல்லுபடமா பாத்துக்கோ” படத்தின் மூலம், திரைத்துறையில்  இயக்குனராக தன் பயணத்தை துவங்கினார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில்  தயாரிப்பாளர்  AKV துரை அவர்களின் D Company  க்காக  ‘குத்துக்குப் பத்து’ என்ற இணைய தொடரை உருவாக்க துவங்கினார்.  தற்போது இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 D Company தயாரிப்பாளர் AKV துரை, இது குறித்து கூறும்போது.., “தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, உடல்நலம்  மற்றும் சுகாதார நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளோம். தற்போது டப்பிங் பணியை தொடங்கியுள்ளோம். விரைவில் இத்தொடரின் டிரெய்லர்  மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடுவோம். இத்தொடரின் படப்பிடிப்பை,  திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிப்பதற்கு, மிகப்பெரும் ஆதரவை வழங்கி, அர்ப்பணிப்புடன் உழைத்த  எனது ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

 “குத்துக்குப் பத்து” தொடர் 7 எபிசோடுகள் கொண்ட இணைய தொடராக உருவாகியுள்ளது. இத்தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரீ, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

“குத்துக்கு பத்து” தொடரை  விஜய் வரதராஜ் எழுதி இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் ஜெகதீஷ் ரவிச்சந்திரன் (ஒளிப்பதிவு), பாலமுரளி பாலா (இசை), சந்தோஷ் செந்தில் – Shifty (எடிட்டிங்), மதன் குமார் (கலை இயக்கம்), டேஞ்சர் மணி (ஸ்டண்ட்ஸ்) முகமது சுபையர் (ஆடை வடிவமைப்பாளர்),  வினோத் சுகுமாரன் (ஒப்பனை) சேது ராமலிங்கம், சரத் நிவாஷ் மற்றும் கே.வி.மோதி (நிர்வாக தயாரிப்பாளர்கள்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.  D Company சார்பில் தயாரிப்பாளர் AKV துரை இத்தொடரை தயாரிக்கிறார்.