கென் கருணாஸ் இயக்கத்தில், கென், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியாஷ்னி யாதவ், தேவதர்ஷினி, சுராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் யூத்.
நாயகன் கென், கணவன் மனைவியான தேவதர்ஷினிக்கும் சுராஜ்க்கும் அதிக வருடங்கள் கழித்து பிறக்கிறார். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவனாக இருக்கிறார்.
தேவதர்ஷினி கென் ஒரே மகன் என்பதால் அதிக பாசத்தோடு இருந்து வருகிறார். அப்பா சுராஜ் தன் படிக்காததால் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் தன் மகனும் தன்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது என்று மகனை எப்பொழுதும் கண்டித்து கொண்டே இருக்கிறார்.
ஆனால் கென்னோ, படிக்காமல் எப்பொழுதும் பள்ளியில் அரட்டை அடித்துக் கொண்டு, நண்பர்களோடு ஜாலியாக இருந்து கொண்டும், பெண்களின் பின்னால் சுற்றிக்கொண்டும் இருந்து வருகிறார்.
இப்படி இருக்கும் கென் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிர்ஷ்டவசமாக தேர்ச்சி பெற்று விடுகிறார். பிறகு 11 ஆம் வகுப்பு சேருகிறார். பக்கத்து வகுப்பில் இருக்கும் மீனாட்சியுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது.
இவர்களின் காதலை பிரிக்க சிலர் திட்டமிடுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதே பள்ளியில் படிக்கும் பிரியாஷ்னி யாதவ் கென்னை காதலிக்கிறார். இதனால் கென்னுக்கும் மீனாட்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன என்பதை யூத் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : கென் கருணாஸ்
தயாரிப்பு : கருப்பையா சி ராம் & சுலோச்சனா குமார்
ஒளிப்பதிவு : விக்கி
இசை : ஜிவி பிரகாஷ் குமார்
மக்கள் தொடர்பு : பரணி

