எஸ்ஆர்எம் பட்டமளிப்பு விழா (2022) 7,125 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர் – லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பட்டம், பதக்கங்கள் வழங்கினார்.
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் 7,125 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர் -நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்று 208 பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் SRMIST (முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்) பட்டமளிப்பு விழா காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.மருத்துவம், பொது சுகாதாரம், அலைடு ஹெல்த் சயின்ஸ், மேலாண்மை, சட்டம், கலை, அறிவியல் படிப்புகளில் பி. எச்டி, எம்.பில், முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் முனைவர் பா. சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார்.துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் நிறுவனத்தின் ஆண்டறிக்கை வாசித்தார்.
பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்ஆர்எம் வேந்தரும், பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் தலைமை வாகித்து வரவேற்று பேசுகையில் :
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பட்டம் பெறுகின்றனர். இரண்டு கட்டமாக பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதல் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இன்று 7,125 மாணவ, மாணவியர் பட்டம் பெறுகின்றனர்.இந்த நிறுவனத்திற்கு ஜனாதிபதிகள் பிரதீபா பாட்டில், பிரனாப் முகர்ஜி, அப்துல்கலாம், பிரதமர்கள் மன்மோகன் சிங், நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் போன்றோர் வந்துள்ளனர். தற்போது நீங்கள் வந்துள்ளீர்கள் நீங்கள் உயர்ந்த பதவிக்கு செல்லும் வாய்ப்பு வரும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை பாராட்டி பேசினார்.
இன்று பட்டம் பெரும் மாணவர்கள் உங்களின் திறமையின் மூலம் உங்களை உயர்த்திக்கொண்டு உங்களின் பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு உதவுங்கள். நமது நாட்டை உயர்த்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்துங்கள், அது நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறவேண்டும், அதன் மூலம் சமுதாயமும், நாடும் வளர்ச்சி காணவேண்டும் என்றார்.
விழாவில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்கலை தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற 208 மாணவ, மாணவியற்கு பதக்கம் பட்டங்கள் வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றுகையில் :
பட்டம் பெரும் மாணவ, மாணவியர்களை வாழ்த்துகிறேன்.எஸ்ஆர்எம் நிறுவனம் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது, இங்கு மாணவர்கள் ஆரோக்கியமான சூழலுடன் பயிலும் வகையில் எஸ்ஆர்எம் வளாகம் பசுமையுடன், தூய்மையான வளாகமாக விளங்கி வருவது பாராட்டுக்குறியது. ஆசிரியர் பணியுடன் தொடங்கிய இந்த நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் கடுமையான உழைப்பின் மூலம் சுமார் 50 ஆயிரம் பேர் படிக்கும் நிறுவனமாக உயர்த்தியுள்ளார், இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
பட்டம் பெரும் நீங்கள் உங்களது திறமைகளை ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் பயன்படுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் எஸ்ஆர்எம் நிறுவனம் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்க தக்கது.
பட்டம் பெற்றபின் அரசு துறையிலோ தனியார் துறையிலோ வேலை தேடும் மனப்பான்மை உருவாக்கிவிடும், நீங்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை கொடுப்பவர்களாக உருவாக வேண்டும்.
நமது நாடு பலத்தரப்பட்ட கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரிய நாடாக விளங்கியது. இந்தியாவை பலத்தரப்பட்ட மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். நமது பாரம்பரிய கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நமது பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
நமது நாட்டில் அந்நிய ஆட்சியின் போது கொண்டு வந்த சட்டங்கள் தான் கடைபிடிக்கபட்டு வருகிறது. இன்றைய காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் தேவை அதனால் பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு மக்களுக்கு பயனுள்ள புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. நாட்டிற்கு பலமான ஜனநாயகம் தேவை அதற்கு புதிய சட்டங்கள் தேவை என்றார்.
நான் உலகில் வளர்ந்த பல நாடுகளுக்கு சென்றுள்ளேன், அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களில் அதிக அளவில் நமது நாட்டு இளைஞ்சர்கள் பணிபுரிவதை கண்டேன். உலகையே மற்றும் சக்தி படைத்தவர்களாக நமது
இளைஞ்சர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் நமது நாடு வளந்த நாடக மாறும் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக்குமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் கே. குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவில் பங்கேற்க வருகை புரிந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர், இணைவேந்தர் முனைவர் பா. சத்தியநாராயணன், துணை வேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் செண்டு அளித்து வரவேற்றனர்.