சகோதரிகளுக்கு கழிவறையை கட்டிக்கொடுத்துள்ள இளைஞர்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்ட இளைஞர்கள் வருகின்ற 7ஆம் தேதி நடைபெற உள்ள ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் தங்கள் மாவட்ட சகோதரிகளுக்கு தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வாக ரக்ஷா பந்தன் நாளில் தங்கள் சகோதரிகளுக்காக கழிவறையை கட்டிக்கொடுத்துள்ளனர். சுமார் 854 இளைஞர்கள் இணைந்து இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளனர்.

கழிவறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அந்த இளைஞர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், கிராமப்பகுதியில் உள்ள பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுப்பதற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காகவும் கழிவறைகள் கட்டுவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.