நடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது.
இப்படத்தின் கதை எம லோகத்தை மையமாக கொண்டது. யோகிபாபு இப்படத்தில் யமனின் மகனாக நடிக்கிறார். நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார்.
விரைவில் வெளியாகவுள்ள கன்னிராசி திரைப்படத்தை இயக்கிய முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். கன்னிராசி திரைப்படத்தில் விமல் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். P. வாரி பிலிம்ஸ் சார்பில் P. ரங்கநாதன் இப்படத்தை இயக்குகிறார். இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி , படத்தொகுப்பு சான் லோகேஷ் , கலை பாலசந்திரன் , காஸ்டியும் முருகன்.