பாவத்தின் சம்பளம் மரணம் எனும் கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் “எந்த நேரத்திலும்”. தன் சகோதரிக்கு பிடிக்காத ஒரு பெண்ணை விரும்பும் நாயகன் அவள் எதிர்ப்பை மீறி நாயகியை கரம்பிடிக்க முடிவெடுக்கிறான். இந்த சூழ்நிலையில் நாயகனின் சகோதரிக்கு ஒரு ஆபத்து ஏற்பட அதிலிருந்து தன் சகோதரியை காப்பாற்றினானா? தன் காதலியை கரம்பிடித்தானா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லும் படம். இதன் படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, கோவை மற்றும் சென்னையில் நடைப்பெற்றுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக விரைவில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தை அஞ்சலி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் அரிமா என்.இராமலிங்கம் தயாரித்துள்ளார்.