கோத்தகிரி அருகே அப்பா, அக்கா சாண்ட்ரா ஏமி, மாமா யாஷ்மித் என தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் நாயகன் ராமகிருஷ்ணன். அதே பகுதியை சேர்ந்தவர் நாயகி லீமா பாபு. லீமாவை சந்தித்த முதல் பார்வையிலேயே ராமகிருஷ்ணனுக்கு காதல் வந்து விடுகிறது. இதையடுத்து தனது காதலை லீமாவிடம் தெரிவிக்க, லீமாவும் ராமகிருஷ்ணனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இதையடுத்து லீமாவை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் ராமகிருஷ்ணன், லீமாவை முதலில் தனது அக்கா சாண்டாராவிடம் கூட்டிச் செல்கிறார்.
லீமாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சாண்ட்ரா, லீமாவிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள். இதையடுத்து லீமாவை தனது வீட்டிற்கே ராமகிருஷ்ணன் கூட்டிச் செல்கிறார். அங்கு லீமாவை பார்த்த ராமகிருஷ்ணன் வீட்டார் அனைவருமே அதிர்ச்சியுடனான பீதிக்கு உள்ளாகின்றனர். மேலும் அனைவருமே லீமாவிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஏன் லீமா பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் என்ற காரணம் தெரியாமல் ராமகிருஷ்ணன் விழித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சாலை விபத்து ஒன்றில் ராமகிருஷ்ணனின் அப்பா மற்றும் மாமா யாஷ்மித் இறந்துவிடுகின்றனர்.
இதனால் தீராத மனவேதனையில் இருக்கும் சாண்ட்ரா, ராமகிருஷ்ணன் மற்றும் தனது மகளை கூட்டிக்கொண்டு அவர்களது பூர்வீக வீட்டிற்கே திரும்ப சென்று விடுகிறார். அந்த வீட்டிக்கு சென்ற பிறகு இரவு நேரத்தில் சாண்ட்ராவுக்கு சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. அதில் லீமாவின் ஆவி சாண்ட்ராவுக்கு தொல்லை கொடுப்பது போன்று தோன்றுகிறது. இதுபோன்ற தொல்லைகளால் அவதிப்படும் சாண்ட்ரா என்ன செய்தார்? சாண்ட்ராவை லீமாவின் ஆவி தொல்லை செய்வது உண்மையா? லீமாவை பார்த்து சாண்ட்ராவும், அவளது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து ஏன்? ராமகிருஷ்ணன் – லீமாவின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்