ஹரி மகாதேவன் இயக்கத்தில், பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, வினோதினி வைத்தியநாதன், லீலா சாம்சன், பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்வர், அஜய், யோகி ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் யெல்லோ.
நாயகி பூர்ணிமா ரவி தன்னுடைய குடும்ப சூழல், வேலை சுமை, காதலில் தோல்வி என அவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் மட்டுமே பார்த்து வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய கவலைகளை தன்னுடைய அப்பாவான டெல்லி கணேசிடம் சொல்கிறார். அப்பொழுது அப்பா டெல்லி கணேஷ் உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய் என்று அவர் சொல்கிறார். அவர் சொல்லிய அன்று இரவே யாரிடமும் சொல்லாமல் பூர்ணிமா ரவி தனியாக கேரள புறப்பட்டு போகிறார்.
தன்னோடு சிறு வயது நண்பர்கள் மூன்று பேரை தேடிப் போகிறார் பூர்ணிமா ரவி. தன்னுடைய சிறுவயது தோழியான நமிதாவை சந்திக்கிறார். அவருடன் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வேறு ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு வைபவ் முருகேசன் அவருக்கு அறிமுகம் ஆகிறார்.
இருவருக்கும் இடையூறு நட்பு ஏற்படுகிறது பூர்ணிமா தன் நண்பர்களை தேடி செல்லும் பொழுது வைபவும் அவருடன் சேர்ந்து பயணிக்கிறார்.
பூர்ணிமா தன்னுடைய நண்பர்களை சந்தித்தாரா? இல்லையா? அதன் பிறகு பூர்ணிமா வாழ்வில் என்ன நடந்தது? வைபவிற்க்கும் பூர்ணிமாவுக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியதா? இல்லை நட்பாகவே இருந்ததா? என்பதே யெல்லோ படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : பிரசாந்த் ரங்கசாமி
இயக்கம் : ஹரி மகாதேவன்
இசை : கிளிஃபி கிறிஸ்
பின்னனி இசை : ஆனந்த் காசிநாத் ஒளிப்பதிவு : அபி ஆத்விக்
மக்கள் தொடர்பு : பரணி

