எமகாதகி விமர்சனம் 3.5/5

Naisat Media Works சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில்,பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில், ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் எமகாதகி.

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்துல உயர் ஜாதி என நினைத்துக் கொண்டிருக்கும் பலர் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களை தாழ்ந்த ஜாதி என்று எண்ணி அவர்களை சில வேலைகளுக்கு அமர்த்தும் பழக்கம் இருந்து வருகிறது. 

அந்த கிராமத்தில் முன்னாள் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவரின் மகன் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரால் ஊரில் கெத்தாத தலை நிமிர்ந்து வாழ முடியாமல் வருந்தி கொண்டிருக்கிறார். 

ஊரின் தலைவராக இருப்பவர் ராஜு ராஜப்பன் இவருடைய மனைவியாக கீதா கைலாசமும், மகளாக ரூபா கொடுவாயுரும், மகனாக சுபாஷ் ராமசாமியும் இருக்கின்றனர். 

ரூபா கொடுவாயுருக்கு சிறுவயதிலிருந்தே மூச்சு விடுவதில் வீசிங் பிரச்சனை இருந்து வருகிறது இதனால் அவ்வப்போது அதற்கான மருந்தை எடுத்துக் கொள்வார்.

மகனான சுபாஷ் ராமசாமிக்கு ஹரிதா உடன் திருமணம் ஆகி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சுபாஷ் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஊரின் கோயிலில் இருக்கும் சாமியின் கிரீடத்தை திருடி தொழில் ஆரம்பித்து அந்த தொழில் நஷ்டம் ஆகிறது. 

எடுத்த கிரீடத்தை திருப்பி கோயிலுக்குள் திருவிழா நடைபெறுவதற்குள் வைத்து விட வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் அதிக கோபத்துடன் வீட்டிற்கு வருகிறார் ராஜு, சாப்பாடு பரிமாறும் தன்னுடைய மனைவியிடம் சண்டை போட்டு கோபத்தில் அவரை அடித்து விடுகிறார். மகள் வந்து அம்மாவை எதற்காக அடித்தீர்கள் என்று கேட்க தகாத வார்த்தை சொல்லி மகளையும் அடித்து விடுகிறார் ராஜு.

அப்பா அடித்ததும் அழுது கொண்டே தன்னுடைய ரூமிற்கு சென்று விடுகிறார் ரூபா கொடுவாயூர். 

தன் மகளை கூப்பிட செல்லும் கீதா கைலாசம் தன் மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். குடும்பம் மொத்தம் அழுது கொண்டிருக்க சுபாஷின் நண்பர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் ஊருக்குள்  தெரிந்து விட்டால், உங்களுடைய குடும்ப கவுரவம் போய்விடும் என்பதால் மூச்சு விடும் பிரச்சனையால் இறந்துவிட்டதால் என்று சொல்லிவிடலாம் என்று கூற அப்படியே ரூபாவின் வீட்டினரும் செய்கின்றனர். 

ரூபாவின் இறப்புச் செய்தி கேட்ட கிராமம் மொத்தமும் ரூபாவின் வீட்டு அருகில் கூடி விடுகிறது. இறுதி சடங்கு செய்வதற்காக ரூபாவின் உடலை கிராமத்து இளைஞர்கள் தூக்க முயற்சி செய்ய, அவளின் உடல் பெரும் கனமாக இருக்க உடலை தூக்க முடியாமல் போகிறது. தொடர்ந்து உடலில் அசைவு ஏற்பட அதனை பார்த்து பயந்து விடுகின்றனர்.

மீண்டும் சிலர் உடலை தூக்க முயற்சிக்க உடல் தானாக எழுந்து உட்காருகிறது. இதனால் ஊர்மக்கள் பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். 

ரூபாவின் உடலை தூக்க முடியாது ஏன்? உண்மையிலேயே ரூபா தற்கொலை தான் செய்து கொண்டாரா என்பதை எமகாதேகி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

 

ஒளிப்பதிவு : சுஜித் சாரங் 

இசை : ஜெசின் ஜார்ஜ்

எடிட்டர் மற்றும் வண்ணம்: ஸ்ரீஜித் சாரங்

தயாரிப்பு : ஸ்ரீநிவாசராவ் ஜலகம்

தயாரிப்பு பேனர் – நைசாட் மீடியா ஒர்க்ஸ் |

அருணா ஸ்ரீ எண்டர்டெயின்மெண்ட்ஸ்

நிர்வாக தயாரிப்பாளர் : வெங்கட் ராகுல்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)