யார் இவர்கள்? போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் யார் இவர்கள்..? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் சீமானை சுற்றி முகமூடி அணிந்த பல பெண்கள் உள்ளிட்ட மர்ம நபர்கள் உள்ளனர். மேலும் எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா? என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது. இப்போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மில்டன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் ஒரு படத்திற்கு யார் இவர்கள்? என பெயரிட்டு இருந்தனர். அதில் கடுகு படப்புகழ் சுபிக்ஷா நாயகியாக நடிக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்து வருகிறார். ஒருவேளை இந்த படத்துக்கும் அந்த போஸ்டருக்கும் தொடர்பு இருக்குமோ? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.