தினேஷ், ஆனந்த் பாண்டி, அப்பு குட்டி, பிரானா, ஷியாமல், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் யாதும் அறியான்.
நாயகன் தினேஷும், நாயகி பிரானாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தினேஷ் காதலியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், பிரானாவோ கண்ணத்தில் முத்தம் கொடுப்பதற்கே அனுமதிக்க மறுக்கிறார்.
மற்ற எல்லாமும் திருமணத்திற்கு பிறகு தான் என்று சொல்லி விடுகிறார்.
இதனை தன்னுடைய நண்பன் ஆனந்த் பாண்டியிடம் சொல்லி புலம்புகிறார். ஆனந்த் அதற்கு ஒரு யோசனை கூறுகிறார்.
ஆனந்தின் யோசனைப்படி தன்னுடைய காதலி மற்றும் ஆனந்த், காதலி ஷியாமல் என நான்கு பேரும் காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு ரிசார்ட்க்கு செல்கிறார்கள்.
அந்த ரிசாட்டில் பணியாளராக இருக்கிறார் அப்பு குட்டி.
ஆனந்த் சொல்லிய யோசனைப்படி தனது காதலியுடன் ஜாலியாக இருக்க நினைக்கிறார் தினேஷ் ஆனால் பிரானாவோ அதற்கு சம்மதிக்கவில்லை.
மீண்டும் மீண்டும் தினேஷ் பிரணாவை தொல்லை செய்ய பிரனா ஒரு வழியாக சம்மதிக்கிறார்.
வெளியில் சென்று புகை பிடித்து விட்டு மீண்டும் உள்ளே வருகையில் நாயகன் தினேஷுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதும் அதற்குப் பிறகு நாயகன் தினேஷ் செய்யும் செயல்களுமே யாதும் அறியான் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : என்.கோபி
இசை : தர்ம பிரகாஷ்
தயாரிப்பு : பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் & தர்மா

