சென்னை வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்துறை 3 வது பட்டாலியன் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற XII வது தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டிகள், சனிக்கிழமை ( 13 ம் தேதி) நடைபெற்ற நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது.
சென்னை வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்துறை 3 வது பட்டாலியன் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற XII வது தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டிகள், சனிக்கிழமை ( 13 ம் தேதி) நடைபெற்ற நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது. இந்திய தேசிய ரைபில்ஸ் சங்கத்தின் செயலர் டிவி.சீதா ராமாராவ் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க, பிரபல திரைப்பட நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களை வழங்கினார். விஜய்குமார் ஐ.பி.எஸ் ( ஓய்வு), போட்டி இயக்குனர் ரவிகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பு செயலாளர் எம்.கோபினாத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“தமிழகம், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடாக, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களைச்சேர்ந்த 800 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கர்நாடாகாவைச்சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை யுக்தி, 10 மீ ஏர் ரைபில் பிரிவில், பெண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள் பிரிவுகளின் கீழ், 400/400 புள்ளிகள் பெற்று, மூன்று தனிநபர் தங்க பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்தார்.” என அமைப்பு செயலாளர் மற்றும் சென்னை ரைபிள் கிளப் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் கூறினார்.