ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இதில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசின் பதிலை நீதிமன்றம் கேட்டிருந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் தனது பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது.
அதில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பதே ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தான் என தெரிவித்துள்ள மத்திய அரசு, 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் விடுதலை செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.