பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 8ஆம்தேதி தொடங்கியது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 13-வது கேள்வி தவறாக இருந்தது. திட்டக்குழுவின் தலைவர் யார்? என்பதே அந்தக் கேள்வி. 2015இல் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையில் தவறாக கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தவறான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், தவறான கேள்விக்கு மதிப்பெண் தரப்படும் என்று தெரிகிறது. நாளை மறுநாள் மொழிப் பாடத்தேர்வு (விருப்பத்தேர்வு) நடைபெறுகிறது. அத்துடன் பொதுத் தேர்வு நிறைவடைகிறது. மே 1ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.