கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்கு பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் மட்டி .இப்படம் வருகின்ற 10 டிசம்பர் 2021 இல் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . அறிமுக நடிகர்கள் யுவன், ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .
இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார் .ராட்சசன் பட எடிட்டர் சன்லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். KGF பட புகழ் ரவி பசுருர் இசையமைக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீ முரளி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இப்படத்தின் டீசர்களை பாலிவுட்டில் அர்ஜுன் கபூர் ,தமிழில் ஜெயம் ரவி, கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார், தெலுங்கில் அணில் ரவிபுடி ,மலையாளத்தில் சிஜு வில்சன் ,அமித் சக்கலக்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர் .
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி ,இங்கிலீஷ் போன்ற 6 மொழிகளில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் பிரகபல் கூறியதாவது:
“மோட்டார் வாகன பந்தையத்தை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளது. மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்தியாவில் தயாராகி உள்ள முதல் படம் இது. 14 கேமராக்கள் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுக்கும் படமாக இருக்கும். இது அட்வென்சர் மூவி. சுமார் 15 ஜீப்கள் இதில் பந்தயத்துக்காக மேம்படுத்தி புதுப்பித்து பயன்படுத்தப்பட்டது. ஹீரோ தவிர உண்மையான மட் ரேஸர்ஸ் இதில் நடித்திருக்கின்றனர்.ஹீரோவும் இதற்காக 2 வருடம் பயிற்சி எடுத்தார். காட்சிகள் படமாக்கப்படும்போது எந்த ஒரு டூப்பும் பயன்படுத்தவில்லை .இப்படத்தை எடுத்து முடிப்பதற்கு எனக்கு 5 வருடம் தேவைப்பட்டுள்ளது. மட்டி திரைப்படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் பல முன்னணி OTT Platforms களிலிருந்து அதிக அளவு லாபம் தரும் பல வியாபாரங்கள் வந்தும் இப்படத்தின் காட்சிகளோ இப்படத்தின் பிரம்மாண்டமும் திரையில் மட்டுமே ரசிகர்கள் கண்டு உற்சாகம் அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது ” இவ்வாறு கூறியுள்ளார் .
முதன்மை கதாபாத்திர நடிகர்கள் : யுவன், ரிதான் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ் , அமித் சிவதாஸ் நாயர், இதர கதாபாத்திர நடிகர்கள் :ஹரிஷ் பேரடி, I M விஜயன் , ரேஞ்சி பனிக்கர் .