உலக யோகா போட்டியில் தங்கப்பதக்கம் கோவில்பட்டியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவில்பட்டியில் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் அபுதாபி யில் நடந்த உலக யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

ஜீவ அனுக்கிரகா பொது நல அறக் கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ் கல்ட்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொது செயலாளர் மாரியப்பன் வரவேற்றார்.

அபுதாபியில் நடந்த உலக யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் சந்தீபன், சவுரி ராஜன், தனுஷ், நடேச மாதவன் மற் றும் பயிற்சியாளர் சோலை நாராயணன் ஆகியோரை பாராட்டி தமிழ் நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு தூத்துக் குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தி னம், தாய்லாந்து பதஞ்சலி யோகா ஹெல்த்கேர் சென்டர் முகமது ஜக்காரியா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி செயலாளர் மாணிக்கவாசகம், பள்ளி முதல்வர் தேன் மொழி, பொருளாளர் ரத்தினராஜ், வக்கீல் வினோத், காமராஜ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி, வேல்ஸ் வித்யாலயா முதல்வர் சேவியோ லூயிஸ், மணி, சந்திரசேகர், சூரிய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் கல்ட்சு ரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக் திவேல்முருகன் நன்றி கூறினார்.