உலக தாய்பால் வாரவிழா இன்று தொடங்கி 7ஆம் தேதி வரை கொண்டாட்டப்படுகிறது

உலக தாய்பால் வாரவிழாவை முன்னிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை உலக தாய்பால் வாரவிழா கொண்டாட்டப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் முன்பு 25க்கும் மேற்பட்ட செவிலியர்களும்50க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. தாய்ப்பால் ஊட்டுதலை வலியுறுத்தும் பாதாகைகளை ஏந்தி செவிலியர்கள் பேரணியாகவும் வந்தனர். இந்தியாவில் 40 சதவீத தாய்மார்கள் மட்டுமே தாய்பால் ஊட்டுவதாக மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்தார்.