தி பார்க் ஓட்டலில் நடைபெற்ற சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு பசிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட பேஷன் ஷோ

சர்வதே உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 150 நாடுகளில் இந்த உணவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 82 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் தவித்துவருகின்றனர். இதில் சென்னை மாநகரில்,ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அடுத்த வேளை உணவு கிடைக்காமல் ஏங்கிகிடக்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பல சமூக பிரச்சினைகளுக்கு மத்தியில் பசியால் வாடுபவர்கள் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், பசிக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஒரு சிறு முயற்சியை, சமூக ஆர்வளரும் அரசியல்வாதியுமான அப்சரா அவர்களும் தி பார்க் குழுமமும் முன்னெடுத்துள்ளார்கள்.  

பசியால் பாதிக்கப்பட்டுள்ளோரின் நிலையை வெளிப்படுத்த பிரபல நடிகர்கள், தொழிலதிபர்களை அழைத்து விழிப்புணர்வு நிகழ்வை ஏற்படுத்த முயல்வதில் சமூக ஆர்வலர் அப்சாரா முற்போக்கு எண்ணம் கொண்டவர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஜேப்பியார் குழும இயக்குனர் சரண்யா ஜெய்குமார், அடையார் ஆனந்த பவன் தலைவர் ஸ்வேதா ரவி, திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி, மருத்துவமனை உரிமையாளர் சுரக்‌ஷித் பஹாட்டினா, பிக் பாஸ் புகழ் ஷாரிக், திருமணம் ஏற்ப்பாட்டாளர் ரீமா திவாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, தொழிலதிபரும் அரசியல்வாதியுமான அருண் வெங்கட்ராமன், சமூக ஆர்வலர் நீரஜா மல்கோத்ரா ஆகியோரும் பங்கெடுத்துக்கொண்டார். 

இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஐஷ்வர்யா கலந்து கொண்டு தன் பங்களிப்பை அளித்தார். இந்த நிகழ்வில் அனைத்து முன்னணி தொழிலதிபர்களும், காவல் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான அப்சரா அவர்கள், இன்றை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்று மிகப்பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ள நம்மால், நம் நாட்டில் பசியால் வாடுபவர்களையும் மீட்டெடுக்கமுடியும் என்றார். பாதுகாற்றவர்களாக உணருபவர்களையும், அடுத்த வேளை உணக்குக்காக தவிப்பவர்களையும் எங்களது விழிப்புணர் நிகழ்வுகளின் மூலம் மீட்டெடுப்போம் என்றும் அப்சாரா அவர்கள் கூறினார்கள். 
 
இதனை தொடர்ந்து, அப்சரா அவர்களும் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியும் தங்கள் குழுவினருடன் இணைந்து 10 ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு உணவு கொடுத்து, அவர்களுக்கான ஆதரவை தெரிவிக்க இருக்கிறார்கள்.