மூத்தவர்கள், முதியவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உடைகள் அணிந்து அசத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியை அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் கண்டு ரசித்த நிகழ்வு பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.
ASHIANA SHUBAM ELDERS FEST 2019 என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை மறந்து மூத்தவர்கள், முதியவர்கள் கலந்து கொண்டு நமது பாரம்பரிய உடைகளை அணிந்து ஒய்யார நடைபோட்டு பார்ப்பவர்களை அசத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அவர்களது மகன், மகள் என குடும்பத்தினரும் கலந்து கொண்டதால் அவர்கள் முன் தங்கள் ஒய்யார நடைபோட்டு அவர்கள் அசத்தினர்.
ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகள் மட்டுமல்ல, நாடக போட்டி, பாடல் போட்டி, நடன போட்டி என அனைத்து பிரிவுகளிலும் நமது மூத்தவர்களும், முதியோர்களும் கலந்து கொண்டு அசத்தினர். அதிலும், 92 வயதான லலிதா என்ற முதியவர் “ஆடு பாம்பே, விளையாடு பாம்பே” என்ற பிரபல பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தது அவரது குடும்பத்தினர் உள்பட பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தியது.
தங்களுக்கான கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வெடுத்து வரும் வேலையில் இதுபோன்றதொரு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, மீண்டும் இளம் வயதுக்கு சென்ற உணர்வு எற்பட்டதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
கவர்ச்சியான பாட்டிமார்கள் என்ற தலைப்பில் நடந்த ஆடை அணிவகுப்பு போட்டியில் 15 முதியவர்கள் கலந்துகொண்டு ஒய்யார நடைப்போட்டு அசத்தினர்.
முதல் இடம் ஹரிப்பிரியா
இரண்டாம் இடம் சுரேகா
மூன்றாம் இடம் ராதிகா
மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட பாட்டன் மார்கள் கலந்துகொண்டு நாகரீக உடையணிந்துவந்து அசத்தினர்.
முதல் இடம் மானிக்
இரண்டாம் இடம் கண்ணன்
நடனத்தில் சிறந்து விளங்கிய பாட்டிமார்கள்
முதல் இடம் சுசன்
இரண்டாம் இடம் கலா
மூன்றாம் இடம் வனஜா
திரு & திருமதிகளுக்கான போட்டியில் 14 தம்பதிகள் கலந்துகொண்டு 60 வயதனாலும் தங்களது திறமையும் சுறுசுறுப்பும் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதல் இடம் திரு/திருமதி ரமணன்
இரண்டாம் இடம் திரு/திருமதி சீனிவாசன்
மூன்றாம் இடம் திரு/திருமதி பாலாம்பாள்
போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது.
Vigro Events நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் பூர்னிமா குமார் அவர்கள், 3 வது முறையாக நடத்தும் இந்த நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தவர்கள், மீண்டும் இவர்கள் ஒருவரை சந்தித்துக்கொண்டது அவர்களுக்கு மேலும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
மகளிர் தினம், காதலர்கள் தினம் கடைப்பிடிப்பது போல, முதியவர்கள், பெரியவர்கள் தினமாக இந்த நாளை கடைப்பிடித்து நமது வாழ்வின் நலம் மேம்படுத்தப்படவும், நமது முன்னேற்றத்துக்காகவும் படுபட்ட நம் முன்னோர்களை இதுபோன்ற நிகழ்வில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியளித்ததாக பார்ப்பவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
சென்னை ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற இந்த கண்கவர் நிகழ்ச்சியில் தொழிலதிபர்
பத்ம ஶ்ரீ நல்லி குப்புசாமி, பிரபல பின்னணி பாடகர் எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை அம்பிகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.