கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் தேசிய ஊராக வேலைவாய்ப்புதிட்டத்தின் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலரின் வங்கி கணக்கு கடலையூர் சாலையில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் உள்ளது. இவர்களுக்கு தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டதில் பணியாற்றியதற்கான ஊதியம் வங்கியினால் நியமனம் செய்யப்பட்ட தனிநபர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கியால் நியமனம் செய்யப்பட்ட தனிநபர் சரியாக பணத்தினை வழங்கவில்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்றுவருவதாகவும், எனவே தங்களுக்கு வங்கியில் ஊதிய பணத்தினை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பாண்டியன் கிராம வங்கி கிளையினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கிழக்கு காவல்துறை ஆய்வாளர் பவுல்ராஜ், வங்கி கிளை மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த மாதத்திற்கான ஊதிய பணத்தினை வங்கியில் பெற்றுக்கொள்ளும் படியும், தொடர்ந்து வங்கியில் பணம் எடுத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.