விட்னஸ் விமர்சனம்

நடிகை-நடிகர்கள்:

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி செல்வா, ராஜீவ் ஆனந்த், தமிழரசன், ஸ்ரீநாத் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பாளர் – டிஜி விஸ்வ பிரசாத்
இணை தயாரிப்பாளர் – விவேக் குச்சிபோட்லா
ஒளிப்பதிவு & இயக்கம் – தீபக்
திரைக்கதை – முத்துவேல், ஜே.பி.சாணக்யா
இசை – ரமேஷ் தமிழ்மணி
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
பாடல் வரிகள் – கபிலன்
கலை – சதீஷ்
ஒலி வடிவமைப்பு – விவேக் ஆனந்தன்
ஒலி கலவை – லாரன்ஸ் ஜி (ஆர்டி ஸ்டுடியோஸ்)
DI – டெக்கான் ட்ரீம்ஸ்
இணை இயக்குனர்கள் – விடிவெள்ளி, சோம்சைநாதன்
இணை ஒளிப்பதிவாளர்கள் – வினோத் ஜே, அவந்தி
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜயபிரகாஷ், வி ஸ்ரீ, நட்ராஜ்
தயாரிப்பு மேலாளர் – வெ கி துரைசாமி
ஸ்டில்ஸ் – கோமளம் ரஞ்சித்
விளம்பர வடிவமைப்புகள் – சிவகுமார் எஸ்
மக்கள் தொடர்பு – குணா

பார்த்திபன் என்ற இளைஞர், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது உயிரிழக்கிறார்.

அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி, ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணி்யிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள்.
அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வழக்கு என்ன ஆனது, நீதி கிடைத்ததா என்பதே மீதிக் கதை.

மனித கழிவுகளை மனிதர்களை வைத்து சுத்தம் செய்யப்படுவதற்கு தடை விதித்த போதிலும், அது தற்போதும் தொடர்ந்து கொண்டு இருப்பதோடு, அத்தகைய பணியாள் பல அப்பாவிகள் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடந்துக்கொண்டிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கும் இப்படம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது, என்பதையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

பார்த்திபன் வேடத்தில் நடித்திருக்கும் இளைஞர் சில காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறுகிறார்.

பார்த்திபனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகினி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, மலக்குழியில் விழுந்து பலியான இளைஞர்களின் குடும்பங்களின் ஒட்டு மொத்த குமுறலாக வலம் வருகிறார்.