தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், வருமான வரிதுறையின் வரி விலக்கு பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்த அவர் மெர்சல் திரைப்படத்தை எச் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் இனைதளத்தில் பார்ப்பது தவறு என்று தான் தெரிவிதேன் தவிர மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
தனது அலுவலகத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடந்திருந்தால் அதை நிச்சயம் எதிர்கொள்வேன் என்றும் அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக விஷால் தெரிவித்தார். மேலும் இன்று நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரு குடும்பம் தீக்குளித்து இறந்துள்ள நிலையில் அனைவரும் இது போன்ற சமுக பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் விஷால் கோரிக்கை விடுத்தார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை இருக்கும் பட்சத்தில் அதை நிச்சயம் எதிர்கொள்வேன் என்று விஷால் தெரிவித்தார்.