வித் லவ் (With Love) மனதை இதமாக்கும் மலரும் நினைவுகள் 4/5

வித் லவ் (With Love) மனதை இதமாக்கும் மலரும் நினைவுகள்

மதன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், கலைமாமணி சரவணன், ஹரிஷ் குமார், காவியா அணில், சச்சின் நாச்சியப்பன், சச்சனா, ஆர் ஜே ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் வெளிவர உள்ள படம் வித் லவ்.

நாயகன் அபிஷன் ஜீவந்திற்கு திருமணத்திற்காக அவருடைய அக்கா பெண் பார்க்கிறார். பெண்ணைப் பற்றி எந்த தகவலையும் கூறாமல் பெண்ணை சந்திக்குமாறு சொல்லி விடுகிறார். 

அப்படி அனஸ்வரா ராஜனை அபிஷன் சந்திக்கும் போது தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். 

அந்த சமயத்தில் அபிஷன் தன்னுடைய பள்ளிப்பருவ காதலை பற்றி சுவாரஸ்யமாக சொல்கிறார். அதேபோல் அனஸ்வரா ராஜனும் தன்னுடைய பள்ளிப்பருவ காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறார். 

அப்பொழுது அனஸ்வரா ராஜன் ஒரு யோசனை கூறுகிறார் தாங்கள் இருவரும் சேர்ந்து தங்களுடைய முதல் காதலை தேடலாம் என்று. அது எப்படி சரியா வரும் என்று யோசிக்கும் அபிஷன் பிறகு அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். 

அதற்காக இருவரும் தங்களுடைய முதல் காதலை தேடி பயணப்படுகிறார்கள் அந்த சமயத்தில் அனுஸ்வரா ராஜன் மீது அதிக காதல் ஏற்படுகிறது அபிஷனுக்கு. 

அபிஷனும் அனஸ்வராவும் இணைந்தார்களா? இல்லையா? தங்களுடைய முதல் காதலை இருவரும் சந்தித்து தங்களுடைய காதலை வெளிப்படுத்தினார்களா? இல்லையா? என்பதை அழகாகவும் மனதை வருடும் படியும் இதமாகவும் சொல்லி இருப்பதே வித் லவ்.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : மதன் 

இசை : ஷான் ரோல்டன் 

ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா 

படத்தொகுப்பு : சுரேஷ்குமார் 

தயாரிப்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் & மகேஷ் ராஜ் பசிலியான்