வெப்பன் விமர்சனம்

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில், சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜு பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெப்பன்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு, சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரை சந்தித்து போராளிகளுக்கு சூப்பர் பவர் சக்தியை தரும் ஒரு சீரத்தை வாங்கி வர நினைக்கிறார்.

அப்படி என்னும் நினைக்கும் போது அது இந்தியாவுக்கு பெரிய அழிவைத் தரும் என்பதால் அதனை வாங்காமல் வந்து விடுகிறார். ஆனால் போஸின் உதவியாளராக இருக்கும் ஒருவர் அந்த சீரத்தை யாருக்கும் தெரியாமல் கடத்தி வந்து இந்தியாவில் ரகசிய இடத்தில் பாதுகாத்து வைக்கிறார்.

இதனை தெரிந்து கொண்ட ஹிட்லரின் நாட்கள் அவரை கொலை செய்ய முற்படும் வேளையில் தான் எடுத்து வந்த அந்த சீரத்தை தன் மகனின் உடலில் செலுத்தி விட்டு இறந்து விடுகிறார்.

அவரின் மகன் பிறகு வந்த நாட்களில் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு சூப்பர் மேன் சக்தியை பெற்று என்னவெல்லாம் செய்கிறார்? அந்த ஃபார்முலாவை கைப்பற்றுவதற்கு பிளாக் மேன் சொசைட்டி எப்படி எல்லாம் முயற்சி செய்கிறது? என்பதே வெப்பன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : மில்லியன் ஸ்டுடியோஸ்

இசை : ஜிப்ரான்

ஒளிப்பதிவு : பிரபு ராகவ்

இயக்கம் : குகன் சென்னியப்பன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா