நம் சகோதர சகோதரிகளில் சிலர் இந்தியூாவில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என வெவ்வேறு தாய்மொழியைக் கொண்டிருந்தாலும், தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய சமுதாய பங்களிப்பாேடும், தங்களின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்காக கடின உழைப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஓமன் நாட்டின் மஸ்கட்-பர்ஃகா நகரங்களில் இருக்கும் நம் சொந்தங்களில் சிலரை நான் சந்தித்து கலந்துரை யாடினேன். அவர்களனைவரும் ஆத்மார்த்தமாகவும் மிகுந்த ஈடுபட்டது ஒரு மறக்க முடியாத தருணம் ஆகும். புற்றுநோயின் நடைமுறை அனுபவங்கள்-தாக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய காணாெளியும் என்னுடைய கருத்தக்களையும் நான் அவர்களுடனும், அவர்களின் இந்தியா-வாழ் உறவினர்களுடனும் பகிர்ந்து கொண்டேன். நாம்ஒருவருக்கொருவர், மற்றும் அனைவருக்காகவும் வாழ்வோம்.