உத்தரப்பிரதேசத்தில் தெருவில் நடந்தபடியே கைப்பேசியில் பேசிக்கொண்டு செல்லும் பெண்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் ஒன்று அபராதம் அறிவித்துள்ளது. மதுராவில் உள்ள மடோரா பஞ்சாயத்து உறுப்பினர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இதன் படி தெருவில் நடத்து சென்றபடியே கைப்பேசியில் பேசிச் செல்லும் பெண்களிடம் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்திவருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவை பிறப்பித்து வருகிறது யோகி அரசு. இந்த நிலையில், மதுராவில் கைப்பேசியில் பேசினால் அபராதம் விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.