ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு போராடி உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. ஆனால், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத சூழ்நிலை எழுந்தபோது மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் களமிறங்கினர்.
அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டா அமைப்பில் இருந்த நடிகர், நடிகைகளையும் கடுமையாக விமர்சித்தனர். இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பீட்டா உறுப்பினர் என்று சொல்லப்பட்டதால், அவரின் மீது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்தனர். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட உருவாக்கப்பட்டது. விஷால், தான் ஒரு பீட்டா உறுப்பினர் இல்லை என்று சொல்லியும், அவரை சமூக வலைத்தளத்தில் எதிர்த்துக்கொண்டே இருந்தனர். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் மூலம் மௌன போராட்டம் நடத்தியபோதும், அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. இதனால், அவர் டுவிட்டரை விட்டு ஓடக்கூடிய நிலைமையும் ஏற்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அடித்தது சரி என்று சகாயம் ஐஏஎஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, மீண்டும் சமூகவலைத்தளத்தில் விஷால் குறித்து அவதூறான கருத்துக்களை பேசத் தொடங்கினர். இதையறிந்த விஷால் உடனே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் போராட்டம் குறித்து நான் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. இது வெறும் வதந்திதான். என்னை பழிவாங்குவதற்கு இது நேரமில்லை, வேறு விஷயத்தில் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களின் போராட்டம் வெற்றி அடைந்துள்ள இந்த சமயத்தில் என்னை பற்றி தவறான தகவல்கள் வருவது வருத்தம் அளிக்கிறது என்று பேசியிருக்கிறார்.