நெய்யார் பிலிம்ஸ் சார்பில், பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரிப்பில், தாமர கண்ணன் இயக்கத்தில், அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர், ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில், டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள படம் விருந்து.
கதாநாயகி நிக்கி கல்ராணியின் அப்பாவும், அம்மாவும் மர்மமான முறையில்
அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.
அவர்கள் கொலை செய்யப்படுவதால் காவல்துறை நிக்கி கல்ராணிக்கு பாதுகாப்பு அளிக்கிறது. காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறது மர்ம கும்பல்.
அவர்களிடமிருந்து நிக்கி கல்ராணி தப்பிக்கிறார். இருந்தும் தப்பித்தாலும், அந்த கும்பல் தொடர்ந்து அவரை கொலை செய்ய துரத்திக் கொண்டிருக்கிறது,
அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த மர்ம கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை அர்ஜுன் காப்பாற்றுகிறார். நிக்கி கல்ராணியை வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு தங்க வைக்கிறார்.
பாதுகாப்பு கொடுத்த அர்ஜுனையே நிக்கி கல்ராணி கொலை செய்ய முயற்சிக்கிறார் எதற்காக அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்? அதன் பிறகு நடந்தது என்ன? என்பதை விருந்து படத்தோட மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்தாளர் : தினேஷ் பள்ளத்
இசை : ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ்
பாடல் வரிகள் : ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன்
ஒளிப்பதிவு : ரவிச்சந்திரன், பிரதீப் நாயர் எடிட்டர் : வி.டி.ஸ்ரீஜித்
கலை : சஹாஸ் பாலா
மக்கள் தொடர்பு : சரண்