வில்லேஜ் டிக்கெட் 2.0

நமக்கு உணவினை வழங்கும், அங்கீகரிக்கப்படாத மற்றும் அதிகம் பேசப்படாத
விவசாயிகள் குறித்தும், களத்தில் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் நீங்கள்
நேரடியாக அனுபவிக்க விரும்புகிறீர்களா?

உங்கள் நாவின் சுவை மொட்டுகளுக்கு பிடித்தமான மற்றும் உங்கள் ஜீரண
மண்டலத்திற்கு உதவத்தக்கதொரு உண்மையான மற்றும் பாரம்பரியம் மிக்க , உணவு
வகைகளை உட்கொள்ள விரும்புகறீர்களா?

கில்லி, டயர் வண்டி, பம்பரம், ஜெயன்ட் வீல், ராட்டிணம், ரோலிங் ஹார்ஸ் வீல்
போன்ற பாரம்பரிய கிராமத்து விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு
செயல்பாடுகளில் பங்கேற்க விரும்புகறீர்களா?

இதுநாள் வரை, தொலைகாட்சியில் மட்டும் கண்டுகளித்த, கிராமப்புற கலைஞர்களின்
தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப;பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை
நேரடியாக பார்க்க விருப்புகிறீர்களா?

சென்னையில் கிடைக்கப்பெறாத அல்லது அதிக விலையில் மட்டுமே கிடைக்கப்பெறும், அரிசி, சிறுதானியங்கள், வெல்லம், தேன் போன்றவற்றின் அசலான ஆர்கானிக் வடிவங்களை நீங்கள் வாங்க விரும்புகிறீர்களா? மேற்கூறிய கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு உங்களது பதில் “ஆம்” என்றாலும், 3 முதல் 6 ஜனவரி 2019 தேதிகளில், சென்னை, ஓஎம்ஆரிலுள்ள சத்யபாமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜிக்கு உடனடியாக வருகை தாருங்கள்!

பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்டரிங் நிறுவனம் இடையிலான
கூட்டாண்மையில் உருவாக்கப்பட்டுள்ள வில்லேஜ் டிக்கெட் 2.0, இன்று சத்யபாமா
இன்ஸ்டிட்யூட்டில், பொருத்தமான வகையில் பிரம்மாண்டமாக அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்த “நம்ம ஊரு திருவிழா” மேற்கூறியவைகளை மட்டுமின்றி,

நமது கிராமத்து வாழ்வின் 3 தூண்களான – பாரம்பரிய வேளாண்மை முறைகளின் கீழ்
ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விவசாயிகள், கிராமப்புற கலை
வடிவங்கைளை பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் கலைஞர்கள் மற்றும்
கிராமத்து உணவின் பரந்துபட்ட சுவை மற்றும் சிறப்புத்தன்மைகளை பேரார்வத்துடன்
தொடர்ந்து பேணி வரும் சமையல் கலைஞர்கள் ஆகியோரை கொண்டாடும் ஒரு
பிரம்மாண்டமான திருவிழாவாகும். இத்தகைய பின்னணியில் பணியாற்றும் மக்கள்
அவர்களுக்குப் பொருத்தமான அங்கீகாரத்தினை பெறாமல் சிரமப்படுவது ஒரு
வருத்தத்திற்குரிய உண்மையாகும் மற்றும் இது, நமது வாழ்வில் அவர்களது
பங்களிப்பினை கௌரவிக்கும் ஒரு முயற்சியாகும்.

இந்நேர்வின் போது பேசிய, பிராண்ட் அவதார், தலைமை செயல் இயக்குனர்
திரு.ஹேமசந்திரன் அவர்கள், ஒட்டுமொத்த கிராமமும் நகரத்திற்கு கொண்டு
வரப்பட்டுள்ளதை – ஓஎம்ஆரில் பிரம்மாண்டமான முறையில் ஒரு முழுமையான
கிராமம் உருவாக்கப்பட்டுள்ளதை பூரிப்புடன் தெரிவித்தார். 32 சமையல்
கலைஞர்களால், தாயன்புடன் தயாரிக்கப்படும் 3 சிறப்பு உணவு வகைகள் போன்ற
உணவு சார் ஈர்ப்புகளுக்கு கூடுதலாக, இப்பதிப்பின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, ஒரு
ஏக்கர் பரப்பளவிலான ஒரு வேளான் நிலம் கிணறுடன் உருவாக்கப்பட்டுள்ளது
என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஒரு கிராமத்துக் கிணறு மற்றும் பம்ப்செட்டுடன் வருகை தரும் மக்கள், அவர்களுக்கு விருப்பமான பயிரிடல், விதை விதைப்பு போன்ற வேளான் செயல்பாடுகளயும் நேரடியாக முயற்சித்துப் பார்க்கலாம். ஓஎம்ஆர் போன்றதொரு நளிநாகரீகம் மிக்க இடத்தில், வேளான் செயல்பாடுகளை முயற்சித்துப் பார்ப்பது எத்தகையதொரு வேறுபட்ட அனுபவத்தை தரும் என்று எண்ணிப்பாருங்கள்! மேலும், கால்நடை, குதிரை மற்றும் நாய்கள் போன்ற நேரடி வேளான் பயன்பாடுகளுக்கான வளர்ப்புப் பிராணிகளைக் கொண்ட செங்காந்தல் பண்ணையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு டையிலான கிராமத்து திருவிழாக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கிராமத்துப் போட்டிகள் போன்றவைகளும் நடக்கப்பெறவுள்ளது, உங்களுடன் வரும் இளம் வருகையாளர்களின் போட்டியிடல் தன்மைக்கு தீனியிடுவதாகத் திகழும் என்று அவர் தெரிவித்தார்.

நல்ல கீரை புகழ் – திரு.ஜெகன்னாதன் அவர்கள், இந்த திருவிழாவில் அரிசி,
சிறுதானியங்கள், கோல்டு பிரெஸ்டு எண்ணெய்கள், வெல்லம், தேன், மசாலா
பொருட்கள் மற்றும் பருப்புகள் போன்றவைகள் உட்பட்ட அசலான ஆர்கானிக்
உணவுப் பொருட்களையும் மற்றும் மர பொம்மைகள், மண் தயாரிப்புகள், கைகளால்
உருவாக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு தனித்துவமிக்க
விஷயங்களை வழங்கும் “நல்ல சந்தை” – ஐயும் இங்கு அமைத்துள்ளாளர்.
அனைத்திற்கும் மேலாக, இவையனைத்தும், 80 – க்கும் மேற்பட்ட கடைகளில்,
கிராமங்களைச் சேர்ந்த 100 – க்கும் மேற்பட்ட விவசாயிகளால் நேரடியாக இங்கு
விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒட்டுமொத்தமான, இந்த வில்லேஜ் ஃபெஸ்டிவல் 2.0, உங்கள் வயிற்றுக்கு
மட்டுமின்றி, மனதிற்கும் ஒரு திருப்தியான மற்றும் முழுமையான உணர்வை வழங்கும்
மற்றும் அணியின் ஒரு பகுதியாக, நமது நகரவாசிகளுக்கு கிடைக்காத அல்லது
அரிதாகவே கிடைக்கும் கிராமப்புற திறமைகளை அங்கீகரிக்கும் வாய்ப்பினையும்
உங்களுக்கு வழங்கும்!!!