கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் தான் பொதுமுடக்கத்திற்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். படக்குழுவிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டுகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் சுதீப் உடைய பிறந்தநாள் அன்று, படக்குழு அற்புதமான முதல் முன்னோட்டத்தை வீடியோவாக வெளியிட்டது, இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
“விக்ராந்த் ரோணா” தனது எதிரிகளுக்கு எப்படி பயத்தை கொடுத்துள்ளான் என்பது முன்னோட்டத்தின் வாயிலாக அழகாக சொல்லப்பட்டுள்ளது, மேலும்
“விக்ராந்த் ரோணா” உலகிற்கு நம்மையும் இழுத்து செல்லும் படி இதன் முன்னோட்டம் உள்ளது. கிச்சா சுதீப் உடைய ஸ்டைல் மற்றும் மாஸ் நிறைந்த காட்சிகள் மூலம், விக்ராந்த் ரோணா “ இருளின் கடவுள்” என கதை சொல்லப்படுகிறது. ‘The Deadman’s Anthem’ என பொருத்தமான பெயருடன் வெளியான முன்னோட்டம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது…
“ விக்ராந்த் ரோணாவின் ‘Deadman’s Anthem’ முன்னோட்டத்தின் மூலம், சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் உடைய பிறந்த நாளை கொண்டாடியதில், எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். என்பது முன்னோட்டத்தின் வாயிலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் சுதீப் சார் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது….
சுதீப் வர்களும் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசாக, ரசிகர்களுக்கு “விக்ராந்த் ரோணா” உடைய முன்னோட்டத்தை அளித்தது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது தற்போது நேர்மறையான மனநிலையில், உட்சபட்ச மகிழ்ச்சியில் நாங்கள் இருக்கிறோம். கிச்சா சுதீப் அவர்களின் ஆர்வம், திறமை, ஆற்றல் மற்றும் இந்த சோதனையான காலகட்டத்தில் விக்ராந்த் ரோணா திரைப்படத்தை உருவாக்குவதற்கு அவர் அளித்த பங்களிப்பு எல்லாம் தான் இந்த படத்தினை இத்தனை சிறப்பாக உருவாக்கியுள்ளது. இத்திரைப்படம் மாபெரும் படைப்பாக உருவாக அவரே காரணம். இதுவரையிலும் இந்திய திரையுலகம் கண்டிராத ஒரு பிரமாண்டாமான படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.
பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம், 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற சிவக்குமார் படத்தின் கலை இயக்கம் செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அஷோக் மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.