M Studios & Open Screen Pictures வழங்கும், விக்ரம் பிரபு நடிப்பில்,
இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”!
நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார். இந்த முறை இயக்குநர் முத்தையா, இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான “டைகர்” படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். இப்படத்தினை M Studios நிறுவனம் Open Screen Pictures உடன் இணைந்து தயாரிக்கின்றது.
இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில்..,
புலி படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த திரைக்கதையை கூற வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கும் விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த நன்றி. ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளனர். இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்
‘வெள்ளக்கார துரை’ படத்தில் அழகான கெமிஸ்ட்ரி மூலம் ரசிகர்களை கவர்ந்த் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா ஜோடி ‘டைகர்’ படத்தில் மீண்டும் இணைந்து திரையில் தோன்றவுள்ளார்கள். நடிகர் சக்தி வாசு வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அனந்திகா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். ரிஷி (எனும்) அட்டு, டேனியல் (எனும்) டேனி மற்றும் இன்னும் சில பரிச்சயமிக்க தமிழ் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சாம் CS இசையமைக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலைத் துறையை கவனிக்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் மணிமாறன் (எடிட்டிங்), முருகன் (ஸ்டில்ஸ்), பாபா பாஸ்கர் (நடன அமைப்பு), கணேஷ் மாஸ்டர் (ஸ்டண்ட்), மற்றும் S. வினோத் குமார்-தம்பி M பூபதி (நிர்வாகத் தயாரிப்பு) பணிகளை கவனிக்கின்றனர்.