ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் சார்ந்த கதையில் விஜய் நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்துக்கு வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி கரகோஷமிட்டனர். ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடி போனார் விஜய். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சர்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுகிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.