மிக சமீபகாலத்தில் இளைஞர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்ற ஹீரோவாக மாறியிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, ஆக்ஷன் கமர்ஷயலில் அதகளம் செய்யும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணையும் புதிய படம், இன்று மிக எளிதான பூஜையுடன் மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
விஜய் தேவரகொண்ட நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
இந்த வருடத்தில், மிக புதுவிதமான ஐடியாவுடன் அதிரிபுதிரி ஹிட்டாக “ஐ ஸ்மார்ட்” படத்தை தந்திருந்தார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு, உடனடியாக எவரும் எதிர்பாராவிதமாக காதல் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இப்படத்தை துவங்கியுள்ளார். படத்தின் மீது ஈர்க்கப்பட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இப்படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள்.
இது ஒரு முழு இந்திய ரசிகர்களுக்கான படமாக ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிறது.
பூரி ஜெகன்நாத் எப்போதும் ஹீரோவை, அவர்கள் காணாத வேறொரு பரிணாமத்தில் திரையில் காட்டி கலக்குவார். இப்படத்திலும் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத வேடத்தில் இயக்கவுள்ளார்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் முழுமையாக மாறுபட்ட கோணத்தில் விஜய் தேவரகொண்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்காக முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்ஷன் ஹீரோ வடிவத்திற்கு மாற்றி வருகிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான பாத்திரமாக, இக்காதாப்பாத்திரம் அமைந்திருப்பதை ஏற்று வெகு அர்பணிப்புடன் தன் முழு உழைப்பையும் கொடுத்து உழைத்து வருகிறார்.
Puri connects, Touring Talkies சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகை ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Dharma Productions இப்படத்தை வழங்குகிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் – Puri Connect
வழங்குபவர் – Dharma Productions
தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத் , ஷார்மி கவுர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா.