விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed ) படம் குறித்து இந்த புத்தாண்டில் பல அறிவிப்புகள் வெளியாகவுள்ளது

இன்றைய தலைமுறையின் கனவு நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில்,  
கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இந்தியாவின் பன்மொழிபடமாக,  உலகப்புகழ் வரலாற்று நாயகன் மைக் டைசனின் இந்திய திரை அறிமுகமாகவும் அமைந்துள்ள,  LIGER ( saala Crossbreed ) படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் வெகு சில காடசிகள் மட்டும் இந்தியாவில் படமாக்கப்படவுள்ளது.

முன்பே அறிவித்த படி LIGER ( saala Crossbreed )படத்தின்  சிறு காட்சித்துளி (glimpse) 2021 டிசம்பர் 31 அன்று வெளியாகிறது. ஆனால் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை இந்த புத்தாண்டில் மகிழ்விக்க மேலும் பல அறிவுப்புகளை வெளியிடவுள்ளனர். மிகப்பெரும் அறிவிப்பு வீடியோ ஒன்று, டிசம்பர் 29 அன்று காலை 10.03 மணிக்கு வெளியாகவுள்ளது.

டிசம்பர்  30 ரசிகர்களுக்கு இரு விருந்து காத்திருக்கிறது. BTS புகைப்படங்கள் காலை 10:03 மணிக்கு வெளியாக, சிறப்புமிகு Insta Filter மாலை  4 மணிக்கு வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டின் இதே நாளில், படத்தின் முதல் காட்சி துணுக்கு வெளியானது. ஆதலால் Liger குழுவிடமிருந்து அடுத்தடுத்த விருந்துக்கு தயாராக இருங்கள்.

விஜய் தேவரகொண்டா அறிவிப்பு போஸ்டரில் குத்து சண்டை வளையத்திற்குள் பெரும் சண்டைக்கு செல்லும் முன், ஓய்வெடுப்பதாக  இருந்தார், இந்த போஸ்டருக்காக பெரும் பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி போனிடெயில் சிகை அலங்காரத்துடன் இருந்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் மைக் டைசன் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் பங்குபெற்ற காட்சிகளின் அமெரிக்க  படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே இந்தியாவில் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்தியாவின் மிகப்பிரமாண்டமான ஆக்சன் அதிரடி திரைப்படமாக, மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையின் பின்னணி கதையில், உலகப் புகழ் மைக் டைசன் முக்கிய காதாப்பாத்திரத்தில் பங்கேற்க மிக முக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. திரையில் இந்த ஆக்சனை காண வெகு ஆரவத்துடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் தேவரகொண்டா, மற்றும் மைக் டைசன் பங்குபெறும் இப்படத்தின் சிறு காட்சித்துளி (glimpse)  ஆக்சன் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த புத்தாண்டு பரிசாக இருக்கும்.

Puri connects மற்றும்  பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோர்  இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

இந்திய பன்மொழி திரைப்படமான இப்படம்  இரத்தம் தெறிக்கும் ஆக்சன் விருந்தாக ஆகஸ்ட் 25, 2022  வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் சாதனைப் படமான அர்ஜுன் ரெட்டி படமும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தான் வெளியிடப்பட்டது. எனவே, Liger விஜய் தேவரகொண்டாவின் மற்றொரு பிரமாண்ட வெற்றிப்படமாக மற்றும் ட்ரெண்ட் செட்டிங் படமாக இருக்கும்.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

தொழில் நுட்ப குழு
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha