விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் டைட்டில்

விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தின் டைட்டில்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காளி’ படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார். அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஐயர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.  இதுதவிர ‘திமிரு புடிச்சவன்’ என்ற படமும் விஜய் ஆண்டனியின் கையில் உள்ளது.  

விஜய் ஆண்டனி படத்தின் டைட்டில்கள் எப்போதுமே வித்தியாசமாக  சைத்தான், பிச்சைக்காரன், எமன், திமிரு புடிச்சவன் என்று இருக்கும். தற்சமயம் இவருடைய அடுத்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. மேற்கூறிய படங்களின் வரிசையில் இந்தப் படத்திற்கும் ஒரு வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்கள். திமிரு புடிச்சவனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்தப் படத்திற்கு ‘கொலைகாரன்‘ என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.