நடிகர் நடிகைகள் :
சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : எல்ரெட் குமார்
இயக்கம் : வெற்றிமாறன்
கலை : ஜாக்கி
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
இசை : இசைஞானி இளையராஜா
படத்தொகுப்பு : ராமர்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா, டிஒன்.
பழங்குடி மக்களை விரட்டியடித்துவிட்டு, கனிம வளத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்துக்கு அருமபுரி என்ற மலையை கொடுக்க அரசு முடிவு செய்கிறது. அரசோட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் படை என்ற அமைப்பு போராடுகிறது. மக்கள் படை இருக்கும் வரை கனிம வளங்களை எடுக்க முடியாது என்பதால், அந்தப் பகுதியில் நடக்கும் ரயில் குண்டு வெடிப்பு பழியை மக்கள் படை மீது சுமத்தி, மக்கள் படையை தீவிரவாத அமைப்பாக அரசு சித்தரித்து விடுகிறது. இதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற பெயரில் காவல்துறை, மக்கள் படை தலைவரான விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக மலை மீது முகாமிடுகிறது.
இந்நிலையில், காவலராக பணியில் சேரும் சூரி, ஜீப் ஓட்டுநராக மக்கள் படை தலைவரை பிடிக்கும் காவல் படையில் இணைகிறார். மனித விமானத்தால் பழங்குடியின மக்களுக்கு உதவி செய்து உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகி சூரி தண்டிக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் ஆபரேஷன் கோஸ்ட் திட்டத்தின் தலைவராக டிஎஸ்பி கெளதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அவரோட விசாரணையில்மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதியின் இதுவரை வெளிவராத முகம் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது.
இந்த நிலையில், காவல் படைக்கும், மக்கள் படைக்கும், இடையிலான மோதல் அதிகரிக்கிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட, கோபமடையும் காவல்துறை ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரையும் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்கிறது. இதை பார்த்து பதற்றமடையும் சூரி, மேல் அதிகாரிகளிடம் கெஞ்சுகிறார்.
சூரி அவர்களை காப்பாற்றினாரா? இல்லையா? மக்கள் படை தலைவர் விஜய் சேதுபதி பிடிபட்டாரா? இல்லையா? என்பது தான் படத்தின் “விடுதலை பாகம் 1” படத்தின் மீதிக்கதை.
விடுதலை பாகம் 1 படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர். “விடுதலை பாகம் 1” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.