விடுதலை 2 விமர்சனம்

விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், புவனா ஸ்ரீ, வின்செண்ட் அசோகன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பாகம் விடுதலை 2.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பம் ஆகிறது. பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) குமரேசனால் (சூரி) கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவனின் தனக்கு கீழ் இயங்கும் காவல்துரையின் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.

ஆனால் அந்த இடம் பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி விஜய் சேதுபதியை வேறு இடத்திற்கு மாற்றுகின்றனர். அப்படி அவரை அழைத்துச் செல்வதற்கு சேத்தன் தலைமையில் 5 பேர் செல்கின்றனர். அதில் ஜீப் டிரைவராக போகிறார் சூரி.

அவர்கள் காட்டு வழியக பயணம் செல்கிறார்கள். அப்போது போலிசாரிடம், தான் எப்படி மக்கள் தலைவனாக ஆனேன் என்று சொல்கிறார் விஜய் சேதுபதி.

பெரிய பணக்காரர்களும், ஜமீன் தாரர்களும் மக்களை ஆட்சி செய்த காலத்தில், கூலி வேலை பார்ப்பவர்கள்
அவர்களுக்கு வேலை செய்தும் சேவை செய்தும் வந்தனர்.

அந்த ஊரில் இருக்கும் கருப்பு (கென்) இதனை எதிர்த்து கேள்வியெழுப்புகிறார். அங்கிருக்கும் பாடசாலைக்கு விஜய் சேதுபதி வாத்தியாராக இருக்கிறார். எதனையும் சட்டப்படியும், நேர்மையாகவும்
செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

ஒரு சமயத்தில், ஊர் ஜமீன்தாரர் கிராமத்தில் இருக்கும் பெண்ணை பலவந்தமாக அவர் வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய, அதனால் கோபபட்டு கென் ஜமீன்தாரை வெட்டி கொலை செய்கிறார்.

அதனால் ஜமீன்தாரின் தம்பியாக வரும் போஸ் வெங்கட், கென்’னை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக கென் எங்கிருக்கிறான் என்று கேட்டு மக்களை அடித்து துன்புறுத்துகிறார்.

விஜய் சேதுபதி கென்னை போலீஸிடம் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பாக வைத்துள்ளார். ஆனால், போலீஸோ
இதனை போஸ் வெங்கட்டிடம் சொல்லி விடுகின்றனர்.

போஸ் வெங்கட் கென்னையும் அவனது காதலியையும் வெட்டிக் கொல்கின்றனர். விஜய் சேதுபதியையும் அடித்து போட்டு விட்டு சென்று விடுகிறார்.
படுகாயங்களுடன் இருக்கும் விஜய் சேதுபதியை கிஷோர் காப்பாற்றுகிறார் .

கிஷோர், கம்யூனிஸ்ட் தலைவராக இருக்கிறார். அவர் ஏழை எளிய மக்களுக்காக போராடி நீதியை வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறார்.

கிஷோர் விஜய் சேதுபதியை தலைமை பொறுப்பேற்க வைக்கிறார்.
விஜய் சேதுபதியும் மக்களுக்காக போராடுகிறார். சர்க்கரை ஆலைத் ஆரம்பித்து பல போராட்டங்களில், மக்களுக்கான நீதியை விஜய் சேதுபதி வாங்கி கொடுக்கிறார்.

சர்க்கரை ஆலையின் முதலாளியின் மகளான மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

ஒரு கட்டத்தில், முதலாளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராளிகளை ஒட்டுமொத்தமாக தீர்த்து கட்ட முடிவு செய்ய, விஜய் சேதுபதி ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

அதனால் விஜய் சேதுபதி கைது செய்யப்படுகிறார்.

கைது செய்த விஜய் சேதுபதி போலீசார் என்ன செய்தனர்? என்பதை விடுதலை 2 படத்தின் மீதிக்கதை.

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர் : வெற்றிமாறன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு இயக்குனர் : ஆர் வேல்ராஜ்
கலை இயக்குனர் : ஜாக்கி
ஆசிரியர் : ராமர்
ஆடை வடிவமைப்பாளர் : உதாரா மேனன்
சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா & பிரபு
ஒலி வடிவமைப்பு : டி உதயகுமார்
ஒலி விளைவுகள் : பிரதாப்
VFX : ஆர் ஹரிஹரசுதன்
நிர்வாக தயாரிப்பாளர் : ஜி மகேஷ்
இணை தயாரிப்பாளர் : வி மணிகண்டன்
தயாரிப்பாளர் : எல்ரெட் குமார் (ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்)