லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜீனா கெசண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் விடாமுயற்சி.
அஜித்தும் திரிஷாவும் ஒரு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். திரிஷாவிற்கு அஃபேர் இருப்பதால் அஜித்திடம் விவாகரத்து கேட்டு 13 வருட குடும்ப உறவை முறிக்க முடிவு செய்கின்றனர்.
விவாகரத்து கிடைக்கும் காலம் வரையில் தனது அப்பா வீட்டில் இருக்க விரும்புவதாக த்ரிஷா சொல்ல, தானே கூட்டிக்கொண்டு செல்வதாக அஜித் சொல்ல இருவரும் காரில் பயணிக்கிறார்கள்.
பாலைவனம் போயிருக்கும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வில்லன் ஆரவினால் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. அதனை கடந்து இருவரும் மீண்டும் பயணிக்க வழியில் கார் பழுதாகி நின்றுவிட அந்த வழியாக பெரிய லாரி டிரக் ஒன்றில் வரும் ரெஜினா மற்றும் அர்ஜுனிடம் உதவி கேட்க அவர்கள் திரிஷாவை அருகில் இருக்கும் பாரில் விட்டு விட்டு காரை அழைத்துச் செல்ல போன் செய்து வேறு ஒரு காரை அனுப்புவதாக சொல்கிறார்கள்.
சிறிது நேரத்தில் காரை சரி செய்து அந்த பாருக்கு சென்று அஜித் பார்க்கும்போது அங்கு த்ரிஷா வரவில்லை என்று கூறுகிறார் அந்த பாரின் ஓனர்.
தன் மனைவி திரிஷாவை கடத்தி விட்டார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொள்கிறார் அஜித். எதற்காக த்ரிஷாவை கடத்தினார்கள்? கடத்தல் கும்பலிடம் இருந்து மனைவி த்ரிஷாவை அஜித் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே விடாமுயற்சி படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : மகிழ் திருமேனி
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா, ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : என். பி. ஸ்ரீகாந்த்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
ரேட்டிங் 3/5